சென்னை-ஷீரடி வாராந்திர விரைவு ரெயில் நாளை 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை-ஷீரடி வாராந்திர விரைவு ரெயில் டிச.14-ம் தேதி 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2022-12-13 12:07 GMT

சென்னை,

சென்னை சென்ட்ரல் - சாய்நகர் ஷீரடி வாராந்திர விரைவு ரெயில் எண் 22601, சென்னை சென்ட்ரலில் இருந்து சாய்நகர் ஷீரடிக்கு, எஸ்ஆர்/தெற்கு மண்டலத்தில் இந்திய ரெயில்வேக்கு சொந்தமான விரைவு ரெயில் ஆகும். இந்த விரைவு ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் நேரம் 10.20, மற்றும் சாய்நகர் ஷீரடிக்கு வரும் நேரம் 11.25 ஆகும்.

இந்த நிலையில், சென்னை-ஷீரடி வாராந்திர விரைவு ரெயில் டிச.14-ம் தேதி(நாளை) 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காலை 10.20 மணிக்கு பதில் 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்