சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Update: 2022-10-06 15:53 GMT

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவானதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, அதிகபட்சமாக தண்டையார்பேட்டையிலும், அடுத்தப்படியாக அம்பத்தூரிலும் மழை பதிவாகி உள்ளது.

15-வது மண்டலத்திற்கு உட்பட்ட 192-வது வார்டில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதாகவும், அடையாறு காந்திநகரில் விழுந்த மரமும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்