தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்ட மேலாளராக விஸ்வநாத் ஈர்யா பொறுப்பேற்பு

தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்ட மேலாளராக விஸ்வநாத் ஈர்யா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2023-07-21 11:32 GMT

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளராக இருந்த கணேஷ் கடந்த 15-ந்தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை கோட்டத்திற்கு புதிய மேலாளராக பி.விஸ்வநாத் ஈர்யா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், 1992-ம் ஆண்டு இந்திய ரெயில்வேயில் பொறியாளர் பிரிவில் பணியில் சேர்ந்தார். ரெயில்வேயில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்