தமிழக அரசின் தாய் - சேய் நலப் பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழக அரசின் தாய் - சேய் நலப் பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசின் தாய் - சேய் நலப் பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டெண்டரை நிராகரித்த தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக உத்தரவை எதிர்த்து தஞ்சாவூர் ஶ்ரீ சாந்தி சர்ஜிக் கேர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அரசு நிறுவனங்களுக்கு 3.30 லட்சம் பெட்டகங்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு என்ற மத்திய அரசு நிறுவனத்திற்கு சப்ளை செய்திருப்பதாக மனுதாரர் நிறுவன தரப்பு வாதத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.