#லைவ் அப்டேட்ஸ்; அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: திங்கள் கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைப்பு

பொதுக்குழுவை கூட்ட அதிமுக தலைமை நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை நேற்று சென்னை ஐகோர்ட் எழுப்பியிருந்தது.

Update: 2022-07-08 08:56 GMT


Live Updates
2022-07-08 12:02 GMT

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவு திங்கள் கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2022-07-08 11:45 GMT

பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக முன் வைத்த வாதம் தவறு, தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என கருத முடியும் என்று ஒபிஎஸ் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது.

கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை என்றும் சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்ட வேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் பரபரப்பு வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

2022-07-08 10:54 GMT

பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரவும், நிறைவேற்றவும் அதிகாரம் உள்ளது. அங்கு எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது. எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம். அதை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது  என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. 

2022-07-08 10:32 GMT

“ஓபிஎஸ் மனு விசாரணைக்கே உகந்தது அல்ல“ கட்சி பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றத்தில் முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.முன் அனுமதி இல்லாமல் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

2022-07-08 10:29 GMT

ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்த எந்த தடையுமில்லை என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் மனுதாரகள் உச்சநீதிமன்றத்தைதான் அணுக வேண்டும் - ஈபிஎஸ் தரப்பு!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார், இருப்பினும் ஒட்டுமொத்த சட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்!

- ஈபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம்

2022-07-08 10:19 GMT



2022-07-08 09:49 GMT

கடந்த டிசம்பர் மாத செயற்குழுவில் ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைபாளரை அடிப்படி உறுப்பினர்கள் தான் தேர்ந்து எடுக்க முடியும் என விதி திருத்தப்பட்டது. செயற்குழுவிற்கு விதிகலை திருத்தும் அதிகாரம் இல்லாததால் பொதுக்குழு ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது.

ஆனால் ஜூன் 23 பொதுக்குழுவில் இந்த திருத்தம் தாக்கல் செய்யப்படவில்லை. திருத்தம் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதனடிப்படையில் நடந்த உடகட்சி தேர்தலும் செல்லாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

2022-07-08 09:45 GMT

சென்னை,

உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. தொடர்ந்து முன் வைக்கப்பட்ட வாதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

அதிமுக பொதுக்குழுவை நடத்த உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு.

ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு 2,190 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.


2022-07-08 09:37 GMT

சென்னை:

ஜூலை 11 ந்தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய ஓ.பன்னீர் செல்வம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளராக கருதும் ஓ.பன்னீர் செல்வம் ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளது என கருதி வழக்கு தொடர்ந்துள்ளார். கட்சிக்கு எதிராகவும், உச்சபட்ச அதிகாரமிக்க பொதுக்குழுவுக்கு எதிராகவும் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

2022-07-08 09:27 GMT

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை-உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு பதில்

கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் - ஈபிஎஸ் தரப்பு

Tags:    

மேலும் செய்திகள்