சென்னை தினம்; இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக சென்னை மாற கடுமையாக உழைப்போம் - ராமதாஸ்

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2023-08-22 06:28 GMT

சென்னை,

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 384-வது சென்னை தினமாகும். இதையொட்டி தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 'சென்னை தினம்' இன்று கொண்டாடப்படுவதையொட்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள். சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை நாள் கொண்டாடும் சென்னை மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 384 ஆண்டுகளில் சென்னை அடைந்த வளர்ச்சி வியக்கத்தக்கது. இந்திய காவல்துறை இங்கு தான் உருவாக்கப்பட்டது; சென்னை தான் இந்தியாவின் பழமையான (மா)நகராட்சி.

சென்னைக்கு இந்த பெருமைகள் மட்டும் போதாது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக சென்னை மாற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்