தீபாவளி கொண்டாட்டம்: மின்சார விளக்குகளில் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்
தீபாவளியை முன்னிட்டு சென்னை விமான நிலையம் மின்சார விளக்குகளால் அலங்கரீக்கப்பட்டுள்ளது.;
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
நுழைவு வாயில், விமான நிலைய சுவர்கள், செடிகளில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தீபாவளி வாழ்த்துக்கள் என மின்சார அலங்கார விளக்குகளால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
விமான நிலைய மேற்கூரைகள் முவண்ண விளக்குகளால் ஜோலித்தன. சென்னை விமான நிலையம் முழுவதும் விளக்குகள் முலம் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதை கண் கவரும் வகையில் அமைந்து உள்ளது.