தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய செங்கமலம் யானை
மன்னார்குடியில் தேசியக்கொடிக்கு செங்கமலம் யானை மரியாதை செலுத்தியது.
மன்னார்குடி:
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு பாகனுடன் ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலம் வந்தது. தொடர்ந்து யானை செங்கமலம் தனது துதிக்கையை தூக்கி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது. பாப் கட்டிங் செங்கமலம் என பக்தர்களால் அழைக்கப்பட்டு புகழ்பெற்ற செங்கமலம் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.