ரசாயன கழிவுநீர் கலப்பதால் நுங்கும், நுரையுடன் வெளியேறும் தண்ணீர்
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரசாயன கழிவுநீர் கலந்து நுங்கும், நுரையுடன் தண்ணீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓசூர்:
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரசாயன கழிவுநீர் கலந்து நுங்கும், நுரையுடன் தண்ணீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதன்படி நேற்று கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 931 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 988 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரில் கலந்து மதகு வழியாக நுரை பொங்கி வெளியேறுகிறது.
விவசாயிகள் கவலை
இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுடன் செல்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலந்து நுங்கும், நுரை பொங்கி செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கரையோர மக்கள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.