பாலத்தின் கீழ் கொட்டப்படும் ரசாயன கற்கள்

பாலத்தின் கீழ் கொட்டப்படும் ரசாயன கற்கள் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-22 18:19 GMT

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி வந்து அவற்றை விரைவாக செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் ரசாயன கற்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்துவிட்டு அந்த ரசாயன கற்களை(கார்பனைட்) கொண்டு வந்து பாலத்தின் கீழ் வீசிவிட்டு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ரசாயன கற்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை வாங்கி உண்பதன் மூலமாக, எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படுவதோடு தீராத நோய்களுக்கு மூல காரணமாக அமைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ரசாயன கற்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கும் சமூக பொறுப்பு இல்லாத ஒரு சில வியாபாரிகளிடம் திடீர் ஆய்வு நடத்தி அவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்