பழனி ரெயில் நிலையத்தில் சோதனை

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, பழனி ரெயில்நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.;

Update: 2022-11-21 16:59 GMT

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஆன்மிக நகரான பழனியில் பக்தர்கள், பயணிகள் அதிகம் வந்து செல்லும் ரெயில்நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

குறிப்பாக ரெயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நடைமேடை பகுதியில் நின்ற பயணிகளிடமும் சோதனை செய்யப்பட்டது. அப்போது சந்தேப்படும்படி யாரும் பயணித்தால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். தொடர்ந்து ரெயில்நிலைய வளாக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்