சதுர்வேத சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
மங்கலத்தில் சதுர்வேத சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கலசபாக்கம்
திருவண்ணாமலையை அடுத்த மங்கலத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அமிர்தாம்பிகை சமேத சதுர்வேத சோமநாதீஸ்வரர் ஆலய புனரவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி மங்கள இசை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், நான்கு கால யாக பூஜைகள், லலிதா ஹைஸ்ரநாம பாராயணம், 108 வகை மூலிகை திரவிய ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, தம்பதி பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து கடம் புறப்பாடு பரிவார ஆலய கோபுரத்தில் சதுர்வேத சோமநாதீஸ்வரர் அமுதாம்பிகை அம்மாள் ஆலய கோபுர கருவறை, விநாயகர் ஆலய கருவறை, முருகன் ஆலய கருவறை, நவகிரக ஆலய கோபுர கருவறை, தட்சிணாமூர்த்தி கோபுர கருவறை, சண்டீஸ்கேஸ்வரர், ஆலய கோபுர கருவறை உற்சவமூர்த்தி ஆலய கோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து தீபாராதனை நடைபெறறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.