சாட்டுப்பால விநாயகர் கோவிலில் சதுர்த்தி நிறைவு விழா
சேரன்மாதேவி சாட்டுப்பால விநாயகர் கோவிலில் சதுர்த்தி நிறைவு விழா நடைபெற்றது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கன்னடியன் கால்வாய் கரையில் அமைந்துள்ளது சாட்டுப்பால விநாயகர் கோவில். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 51 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழாவானது கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி தொடங்கியது. இதனையடுத்து தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் கட்டளைதாரர்கள் மூலம் நடைபெற்றது. சதுர்த்தி நிறைவு நாளன்று சாட்டுப்பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இரவில் சிறப்பு புஷ்ப அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பழனிகுமார், செயல் அலுவலர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.