சட்டநாதபுரம் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு

சட்டநாதபுரம் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2023-02-12 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்