தொண்டு நிறுவன நிர்வாகியை வெட்டிய 6 பேர் சிக்கினர்
ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன நிர்வாகியை வெட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூத்துக்குடி, நெல்லை சிறைகளில் அடைக்கப்பட்டனர்
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் ஓட்டலில் புகுந்து தொண்டு நிறுவன நிர்வாகியை சரமாரியாக வாளால் வெட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, நெல்லை சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
தொண்டு நிறுவன நிர்வாகி
ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் ஆதவா குடும்ப உணவகத்தை நடத்தி வருபவர் பாலகுமரேசன்(வயது 42). இவர் ஆதவா தொண்டு நிறுவனத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 29-ந்தேதி இரவு அடைக்கலாபுரம் சாலையிலுல்ள உணவகத்தில் இருந்தார். அப்போது உணவகத்தில் புகுந்த கும்பல் ஒன்று அவரை வாள் மற்றும் பனை கருக்குமட்டைகளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவர் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகுமரேசனை வெட்டிவிட்டு தலைமறைவான கும்பலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான தனிப்படையினர் தேடிவந்தனர்.
6 பேர் சிக்கினர்
இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஆறுமுகநேரி ராஜமுன்னியபுரம் சக்திவேல் மகன் அன்பழகன்( 20).
ஆறுமுகநேரி காமராஜபுரம் கீழ்பகுதி முத்து மகன் சதீஷ்(24).
காமராஜர்புரம் திலகர் மகன் அலெக்ஸ்(19). அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் மகன் அருள்(20) மற்றும் 2 சிறுவர்களை தனப்படை போலீசார் கைது ெசய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அன்பழகன் உள்ளிட்ட 4 பேர் பேரூரணி மாவட்ட சிறைச்சாலையிலும், 2 சிறுவர்கள் நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.