சேலம் அழகாபுரம்புனித மிக்கேல் ஆலய தேர் பவனி
சேலம் அழகாபுரம் புனித மிக்கேல் ஆலய தேர் பவனி நடந்தது.
சேலம்
சேலம் அழகாபுரத்தில் முதன்மை வான தூதர் புனித மிக்கேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ் செல்வம் கலந்து கொண்டு கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 6 நாட்களாக தினமும் மாலையில் திருப்பலியும், தேர்பவனியும் நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று காலை 8 மணிக்கு ஆயர் சிங்கராயர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலியும், அதன்பிறகு சோனா நகர், பாத்திமா நகர் வழியாக தேர்பவனி ஊர்வலமும் நடந்தது. முடிவில், ஆலயத்திற்கு வந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை எட்வர்ட்ராஜன் தலைமையில் பங்கு பேரவையினரும், பங்கு மக்களும் செய்திருந்தனர்.