பாரத் பெயர் மாற்றம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை - ப.சிதம்பரம்

பாரத் பெயர் மாற்றம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-08 04:05 GMT

சென்னை,

இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என அச்சிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், உலகளவில் "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாரத் பெயர் மாற்ற விவகாரம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் கூறியதாவது:-

இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பாரத் என இருக்கிறது. இந்தியாவும் இருக்கிறது. பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம். பாரத்தையும் பயன்படுத்துகிறோம். பிரதமர் மோடிக்கு திடீரென இந்தியா மீது என்ன கோபம்?.

எதிர்க்கட்சிகள் கூட்டணியை (I.N.D.I.A)என சுருக்கி எழுதுவதால் கோபம் வந்துள்ளது. நாங்கள் பாரத் என பெயரை சுருக்கி வைத்தால், பிரதமர் மோடி பாரத் பெயரையும் மாற்றி விடுவாரா?. இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள். இந்தியா என்பதும் ஒன்றுதான். பாரத் என்பதும் என்றுதான். இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்