திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2023-01-05 17:11 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன் கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குப்புசாமி தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜன்பாபு வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரேணுகோபால் ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கோவிந்தராஜூலு செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் உத்தரவு

பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வெங்கடேசன் அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஹரி பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), விடுப்பில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), விடுப்பில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்