தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

மழை நின்றதால், சென்னையின் பல இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது.

Update: 2023-12-05 02:05 GMT

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் நேற்று முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் பல இடங்களில் மழைநீர் வடிந்துவருகிறது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்