10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-07-09 03:06 GMT

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் இரவு நேரங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது.

இந்த சூழலில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்