தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.

Update: 2023-11-14 21:44 GMT

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்