தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Update: 2023-11-30 02:08 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்