அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-04 13:09 GMT

சென்னை,

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம்புயல் இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே சுமார் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது நாளை (டிச.5) ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடி பகுதியில் அதிகபட்சமாக 29 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. இதேபோல் ஆவடி பகுதியில் 28 செ.மீ., ஆலந்தூர் விமான நிலைய பகுதிகளில் தலா 25 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்து இருக்கிறது. இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண முடிகிறது.

இடைவிடாது பெய்து வரும் மழையால் சென்னையே தத்தளிக்கிறது. சென்னை நகர் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை விடாத சூழலில், மேலும் மேலும் தண்ணீரின் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மிக்ஜம் தீவிர புயல் சென்னையில் இருந்து மெது மெதுவாக நகர தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 'தற்போது மிக்ஜம் புயல் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. காற்று மாற்றங்களின் அடிப்படையில் சென்னையில் இருந்து வடதிசையில் நகரத்தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 6 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட தமிழக வடமாவட்டங்களில் படிப்படியாக மழை குறைய தொடங்கும். கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10.கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்