சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் மாசித்திருவிழா

வேடசந்தூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Update: 2023-02-21 18:45 GMT

வேடசந்தூர் அருகே உள்ள இ.சித்தூரில் பிரசித்திபெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பொங்கல் வைத்து வழிபாடு மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி கோவில் பூசாரி வடிவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், கடவுள் வேடமணிந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அம்மனை தரிசனம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பிறகு கோவில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்