ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர தினத்தையொட்டி நேற்று திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து, அதை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அந்த புனிதநீரால் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்தனர். மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.