சாக்கோட்டை யூனியன் கூட்டம்

சாக்கோட்டை யூனியன் கூட்டம்

Update: 2023-08-17 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே சாக்கோட்டை யூனியன் சாதாரண கூட்டம் அதன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் ஆணையாளர் சாந்தி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாராணி வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் செல்லையா, சுப்பிரமணியன், தேவிமீனாள், தமிழ்செல்வி, சொக்கலிங்கம், திவ்யாகண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. மேலும் கவுன்சிலர் சொக்கலிங்கம் கூறும்போது, தமிழக அரசு மகளிருக்கு ஊக்கத்தொகையாக கொண்டு வரப்பட்ட மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு வரவேற்பு உள்ளது. இந்த திட்டம் தகுதியுடைய அனைத்து பெண்களுக்கும் சேருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். இதைதொடர்ந்து யூனியனுக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்