மாடி கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய ரெயில்வே என்ஜினீயர் மனைவியிடம் தாலிசங்கிலி திருட்டு

மாடி கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய ரெயில்வே என்ஜினீயர் மனைவியிடம் தாலிசங்கிலியை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-10 18:45 GMT

நல்லம்பள்ளி:

தர்மபுரி அருகே ஒட்டப்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜவகர். ெரயில்வே துறையில் சீனியர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீஜா (வயது 30). சம்பவத்தன்று இவர்களது வீட்டில் உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு வந்திருந்த உறவினர்கள், வீட்டின் கீழ் பகுதியில் தங்க வைத்து விட்டு, மேல் மாடியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கதவை திறந்து வைத்து தூங்கினார். இதையறிந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி சங்கிலியை திருடிச்சென்று விட்டது. இதுகுறித்து ஸ்ரீஜா கொடுத்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்