பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மானூர்:
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 53). இவர் மானூர் யூனியன் அலுவலகத்தில் ஓவர்சீயராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை ஸ்கூட்டரில் வழக்கம்போல் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நாஞ்சான்குளம் அருகே வந்தபோது அவருக்கு பின்னால் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், மகாலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலி உள்ளிட்ட 2 சங்கிலிகளை பறித்து சென்றார். அப்போது மற்றொரு சங்கிலி அறுந்ததில் ஒரு பகுதி மர்மநபரின் கையில் சிக்கியது. அந்த சங்கிலிகளுடன் மர்மநபர் தப்பிச் சென்றார். இதுகுறித்து மகாலட்சுமி, மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.