பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2023-04-20 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 33). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையை அடைப்பதற்காக கடை முன்பு வைக்கப்பட்டிருந்த போர்டை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் உமாமேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்