பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
பர்கூர் அருகே பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பர்கூர் அருகே உள்ள பாசிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி விஜயா (வயது 34). இவர், தனது தங்கை செல்வியுடன் பர்கூர் நோக்கி மொபட்டில் வந்து கொண்டு இருந்தார். வண்டியை செல்வி ஓட்டி சென்றார். பின் இருக்கையில் விஜயா அமர்ந்திருந்தார். அப்போது சிப்காட் காந்தி நகர் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விஜயாவின் கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து விஜயா பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.