ரெயில் நிலையத்தில் மத்திய ரெயில்வே மந்திரி ஆய்வு
ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ஆய்வு செய்தார்.;
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ஆய்வு செய்தார்.
மத்திய மந்திரி ஆய்வு
சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை மத்திய ரெயில்வே இணை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனி ரெயிலில் சென்று ஆய்வு செய்தார். இதற்காக அவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவரை சென்னை ரெயில்வே கோட்ட பொது மேலாளர் டி.ஜி.மல்லையா மற்றும் பெங்களூரு ெரயில்வே கோட்ட பொது மேலாளர் சஞ்சய் கிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து அவர் ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேடறிந்தார்.
பெங்களூரு சென்றார்
பின்னர் 2.30 மணிக்கு அதே சிறப்பு ரெயில் மூலம் பெங்களூருக்கு அதிகாரிகளுடன் ஆய்வு பணி மேற்கொள்ள சென்றார். அப்போது ரெயிலில் கண்ணாடி பொருத்தப்பட்ட ரெயில்பட்டியில் இருந்து ரெயில் நிலையங்களையும், ரெயில்பாதைகளையும் கண்காணித்தபடி சென்றார்.
இதில் சென்னை கோட்ட பொது மேலாளர் துறை அதிகாரிகளுடன் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை மத்திய ரயில்வே இணை அமைச்சர் அவர்களை பெங்களூர் ரெயில்வே கோட்ட பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் அனுப்பி வைத்து பின்னர் தனி சிறப்பு ரெயில் மூலம் சென்னை கோட்ட ரெயில்வே பொது மேலாளர் சென்னை நோக்கி புறப்பட்டார்.