எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி எண்ணூர் காமராஜர் துறைமுகம் நீண்ட கடற்கரையை கொண்டதாக விளங்குகிறது. இங்கு கடலில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பொருட்கள் கரை ஒதுங்கி காணப்பட்டது.
இந்நிலையில் வாழ்க்கை முறை சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துணை கமாண்டர் கிஷோர்குமார் தலைமையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் கடற்கரை பகுதிக்கு 75 பேர் வந்து தூய்மை பணியை ஈடுபட்டனர்.