மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
சிவகங்கையில் மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி சிவகங்கை மாவட்ட பா.ஜனதா சார்பில் சிவகங்கையில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சொக்கலிங்கம், நாகேஸ்வரன், நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிவகங்கை நகர்தலைவர் உதயா முன்னிலை வகித்தார். முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமதாஸ், காசிராஜன், மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணி, மண்டல் தலைவர்கள் முத்து முனியாண்டி, ரவிச்சந்திரன், பிரிவு தலைவர் குணாளன், பொதுச் செயலாளர்கள் பாலா, சதீஷ், கல்லல் தெற்கு ஒன்றிய தலைவர் செல்லமுத்து, ஒ.பி.சி. அணி நகர் தலைவர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.