தலைவர்கள் சிலைக்கு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் மாலை அணிவிப்பு

நெல்லையில் தலைவர்கள் சிலைக்கு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-05-24 19:44 GMT

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்த அவருக்கு பாளையங்கோட்டை பஸ் நிலையம் முன்பு தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நெல்லை சந்திப்பு மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்