ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய குழுவின் சிறப்பு பொறியாளர் ஆய்வு

ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய குழுவின் சிறப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-10-20 18:08 GMT

ஆற்காடு ஒன்றியம் தாஜ்புரா ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய குழுவின் சிறப்பு பொறியாளர் சுபாஷ் குமார் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இத்திட்டத்தின் வாயிலாக அனைத்துக் குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா, குடிநீரின் தன்மை மற்றும் மாதந்தோறும் குடிநீர் ஆய்வு செய்யப்படுகிறதா என்பது உள்பட பல்வேறு விளக்கங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், மகளிர் குழுவினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோரிடம் குழுவின் சிறப்பு பொறியாளர் விளக்கங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், தண்ணீரின் கடினத்தன்மை குளோரைடு உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்வதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கி உள்ள வீடுகளுக்கு சென்று சீராக தண்ணீர் வருகிறதா என்பதை ஆய்வு செய்து குறைகள் ஏதும் உள்ளதா எனப் பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது வேதியியல் நிபுணர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சேட்டு, துணைத்தலைவர் தேவி பிரியா சோழன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்