சிமெண்டு கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்ரவுடி கைது

சிமெண்டு கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-08-05 18:45 GMT


விழுப்புரம் முத்தோப்பு அகரம்பாட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). இவர் முத்தாம்பாளையம் பகுதியில் சிமெண்டு கடை வைத்துள்ளார். நேற்று காலை அய்யப்பன், தனது கடைக்கு சென்றபோது அவரது கடை முன்பு முத்தோப்பு திடீர்குப்பத்தை சேர்ந்த ரவுடியான ஷேக்அஸ்கர் (29) என்பவர் மது அருந்திக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அய்யப்பன், தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஷேக்அஸ்கர், அய்யப்பனை திட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யப்பன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக்அஸ்கரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்