கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய கட்டிடத்தின் காரை பெயர்ந்து விழுந்தது-சீரமைக்க போலீசார் கோரிக்கை

கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய கட்டிடத்தின் காரை பெயர்ந்து விழுந்தது. இதை சீரமைக்க போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-17 21:14 GMT

கன்னங்குறிச்சி:

கன்னங்குறிச்சி போலீஸ் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு நேற்று மாலை போலீசார் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தார்சு சுவரில் இருந்து காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் போலீசார் திடுக்கிட்டனர். விழுந்த கற்கள் ஆட்கள் மீது விழாததினால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் கூறும் போது, இந்த போலீஸ் நிலையத்தில் ஆங்காங்கே விரிசல்கள் இருந்து வந்தது. தற்போது காரை பெயர்ந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு பணிபுரியும் போலீசார் அல்லது பொதுமக்கள் மேல் விழுந்து இருந்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்போம். எனவே காரை பெயர்ந்து விழுந்த இடத்தை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக தீர்வு காணவேண்டும்' என்றார்கள். 

மேலும் செய்திகள்