சீர்காழியில் செல்போன் திருடியவர் கைது

சீர்காழியில் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-09-07 05:20 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் ஒரு தனியார் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலில் நேற்று முன்தினம் பொருள் வாங்க வந்த மர்ம நபர் ஒருவர் கடை உரிமையாளரின் செல்போனை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடை உரிமையாளர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாப்பிங் மாலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்போனை திருடியது கடலூர் மாவட்டம் புவனகிரி வடக்குத்திட்டை பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரசன் மகன் பருவ்வதாஸ் (வயது 37 )என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சீர்காழி போலீசார் சொந்த ஊருக்கு சென்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்