மளிகை கடையில் செல்போன் திருட்டு

தியாகதுருகம் மளிகை கடையில் செல்போன் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-08-24 00:51 IST

தியாகதுருகம், 

தியாகதுருகம் மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 58). இவர் தியாகதுருகம் கடைவீதி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கடையில் புருஷோத்தமனின் மனைவி உஷாராணி (50) என்பவர் இருந்தார். அப்போது முககவசம் அணிந்தபடி மர்மநபர் ஒருவர் கடைக்கு வந்தார். பின்னர் அவர் உஷாராணியிடம் புளி வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து உஷாராணி புளி எடுக்க சென்றபோது, அங்கிருந்த ரூ.6 ஆயிரம் மதிப்பிலான செல்போனை அந்த மர்மநபர் திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்