விபத்தில் காயம் அடைந்த செல்போன் கடைக்காரர் சாவு
விக்கிரமசிங்கபுரத்தில் விபத்தில் காயம் அடைந்த செல்போன் கடைக்காரர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மருதையாபுரத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் ராமராஜ். விக்கிரமசிங்கபுரத்தில் செல்போன் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி கடையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சந்தன மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாம். இதில் காயமடைந்த ராமராஜை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.