கூடலூர்
கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரஷீத் தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் பால் விக்டர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று கூடலூர் அரசு தகைசால் பள்ளியில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.