அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

Update: 2023-03-28 18:54 GMT

நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

அ.தி.மு.க. கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரது மனுவை நேற்று ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அந்த கட்சியினர் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை, கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், வக்கீல் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நெல்லை வண்ணார்பேட்டையில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

ரெட்டியார்பட்டி நாராயணன்

இதேபோல் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் நெல்லையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

திசையன்விளையில் அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்ட மகளிரணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.கவினர் கலந்துகொண்டனர்.

ராதாபுரம் ஒன்றியம் வடக்கன்குளத்தில், வடக்கன்குளம் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் வடவை சுரேஷ், வடக்கன்குளம் கிளை செயலாளர் அம்மா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பணகுடி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் பணகுடி நகர துணை செயலாளர் ஜோபி ஜெகன், அவைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவந்திபுரம்

சிவந்திபுரத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அம்பை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் துர்க்கை துரை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிவந்திபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் தர்மராஜ், ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்