உலக காகிதப்பை தின கொண்டாட்டம்

கீழ்வேளூர் அருகே அரசு பள்ளியில் உலக காகிதப்பை தின கொண்டாட்டம்

Update: 2023-07-12 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம், நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் உலக காகிதப்பை தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி பேசுகையில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் நீர், நிலம், காற்று ஆகிய மூன்றும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை குறைத்து எளிதில் மட்கக்கூடிய காகித பைகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார். இதில் பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சீனிவாசன் மாணவர்களுக்கு காகிதப்பை தயாரிப்பு முறையை கற்று கொடுத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்