சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை ஜூலை இறுதிக்குள் வெளியிட வேண்டும் - அமைச்சர் பொன்முடி
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை ஜூலை இறுதிக்குள் வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் காலதாமதம் ஆவது வருத்தத்துக்குரியது. தேர்வு முடிவுகள் காலதாமதம் ஆவதால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை இறுதிக்குள் வெளியிட வேண்டும். முதலாமாண்டு மாணவர் சேர்க்கை மட்டும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நடைபெறும்.
தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டமே உள்ளது. தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்பதை கொண்டு வந்தது திமுக அரசு தான். தமிழ் மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தவர் கலைஞர் கருணாநிதி.
தமிழ் மொழியை மத்திய அரசு வளர்ப்பதாக கூறுவதில் உண்மையில்லை. தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை தமிழக கவர்னர் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.