காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு
நெய்தலூர் காலனியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஜீயபுரம்- நெய்தலூர் சாலை வழியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் கரூர் மாவட்டம் நெய்தலூரில் உள்ள துணை நீரேற்று நிலையத்தில் தண்ணீர் சேமித்து அதன் பின் மீண்டும் புதுக்கோட்டைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்தநிலையில், நெய்தலூர் ஊராட்சி, நெய்தலூர் காலனி மொட்டையன் தெருவில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக காவிரி தண்ணீர் வீணாகி சாலையோரத்தில் செல்கிறது. இதனால் அருகே உள்ள ஊர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.