ரூ.68 லட்சத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணி

பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சியில், ரூ.68 லட்சத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டினார்

Update: 2023-09-13 20:30 GMT

பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சியில், ரூ.82 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதேபோல் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக ரேஷன் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கீரனூர் பேரூராட்சி தலைவர் கருப்புசாமி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பஸ்நிலையம் மற்றும் ரேஷன் கடைகளை திறந்து வைத்தார்.

இதேபோல் கீரனூர் பேரூராட்சியில், ரூ.68 லட்சம் மதிப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை கீரனூரில் நடந்தது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிற 120 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவில் திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் வெற்றிசெல்வி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமச்சந்திரன், தொப்பம்பட்டி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, கீரனூர் பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல் சுக்கூர், மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், பேரூர் செயலாளர் அன்பு, பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்