திமுக ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும்: அமைச்சர் துரைமுருகன்

காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Update: 2023-04-01 07:46 GMT

சென்னை,

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பதில் அளித்து பேசினர். அப்போது துரைமுருகன் கூறியதாவது:- " காவிரி- குண்டாறு திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்ததைப் போல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

அவர் மட்டுமே இந்தத் திட்டத்தை செய்யவில்லை. காவிரி - குண்டாறு இணைப்பு குறித்து சிந்தித்தவர் கருணாநிதி தான். அதற்காக முதன்முதலில் கதவணை கட்ட நிதி ஒதுக்கியவர் கருணாநிதி. அந்த கதவணையைக் கட்டியது நான் தான். 2008 ஆம் ஆண்டு கருணாநிதி இதற்கான ஆணையைப் பிறப்பித்தார். 2009 ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.அதிமுக ஆட்சியில் கால்வாய் வெட்டும் பணி நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் ரூ.177 கோடி கால்வாய் வெட்டும் பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்