ஆவடி அருகே நள்ளிரவில் மின்சார ரெயிலில் தூங்கிய பிளஸ்-2 மாணவரிடம் பணம், செல்போன் திருட்டு

ஆவடி அருகே நள்ளிரவில் மின்சார ரெயிலில் தூங்கிய பிளஸ்-2 மாணவரிடம் பணம், செல்போன் திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-20 06:51 GMT

திருவள்ளூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 45). இவருடைய மகன் நோயல் (வயது 16). இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தந்தை-மகன் இருவரும் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு 12.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரெயில் நிலையம் வரும்போது இவர்கள் இருவரும் ரெயிலில் தூங்கி விட்டதாக தெரிகிறது. அப்போது அதே ரெயிலில் பயணம் செய்த ஆவடி அடுத்த மிட்டனமல்லியை சேர்ந்த 18 வயது சிறுவர்கள் 2 பேர் மாணவர் நோயல் கழுத்தில் கிடந்த அரை பவுன் தங்க சங்கலி மற்றும் சட்டை பையில் இருந்த செல்போனை திருடி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் செல்போன், நகை திருடிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்