ஓட்டல் ஊழியரிடம் பணம், செல்போன் பறிப்பு

ஓட்டல் ஊழியரிடம் பணம், செல்போன் பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2022-10-25 19:58 GMT

தஞ்சை மாவடடம் திருவோணத்தை அடுத்துள்ள ராஜாளி விடுதி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் ரெங்கராஜ் (வயது 34). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தீபாவளி தினத்தன்று மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை பிரதான சாலையில் வேப்பங்காடு பாலம் அருகே அவர் சென்ற போது அங்கு மோட்டார் சைக்கிளுடன் சாலையில் நின்று கொண்டிருந்த 3 பேர், ரெங்கராஜை வழிமறித்து முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ரெங்கராஜ் பையில் வைத்திருந்த ரூ.18 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக சென்று விட்டனர். இதுகுறித்து ரெங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து பணம், செல்போனை பறித்துச் சென்ற 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்