அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு
தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக விசாரணையை சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகளை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் உள்ளிட்ட 3 பேர் ,செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2 ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் என்பதால் எதன் அடிப்படையில் தகுதி இழப்பு ? , எந்த சட்டப்பிரிவில் செந்தில் பாலாஜி தகுதி இழப்புக்கு ஆளாகிறார் ? என ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.வாதங்கள் முடிவில் தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக விசாரணையைச் சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்தது